இறுதி ஊர்வலத்தின் மீது மோதிய முச்சக்கர வண்டி: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம்
19 view
காலி வீதியில் வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் இருந்து வஸ்கடுவ மயானத்தை நோக்கி சென்ற இறுதி ஊர்வலத்தின் மீது முச்சக்கரவண்டி மோதியதில் மூன்று குழந்தைகள் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பொத்துப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள், களுத்துறை பொது வைத்தியசாலையிலும், பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.முச்சக்கரவண்டிச் சாரதி உறங்கிய நிலையில் வாகனம் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. The post இறுதி ஊர்வலத்தின் மீது மோதிய முச்சக்கர வண்டி: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் appeared first on Tamilwin Sri Lanka.
The post இறுதி ஊர்வலத்தின் மீது மோதிய முச்சக்கர வண்டி: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறுதி ஊர்வலத்தின் மீது மோதிய முச்சக்கர வண்டி: குழந்தைகள் உட்பட 7 பேர் காயம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
