ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி!
24 view
நாட்டை படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது என்று முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச மற்றும் பஸில் ராஜபக்ச ஆகியோர் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்திருந்தால் இந்த நாடு மோசமான நிலைக்குச் சென்றிருக்காது. ராஜபக்சக்கள் தங்கள் குடும்ப ஆட்சியில் மாத்திரம் கவனம் செலுத்தியதன் விளைவாகவே இந்த நாடு படுமோசமாக வீழ்ச்சியடைந்தது. இறுதியில் ராஜபக்சக்களும் ஆட்சிப்பீடத்திலிருந்து மக்களின் எழுச்சியால் தூக்கி வீசப்பட்டார்கள். நாட்டைப் படுவீழ்ச்சியடையச் செய்த ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. ராஜபக்சக்களின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் எமது கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிமேல் எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டணி அமைக்காது” – என்றார்.
The post ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ராஜபக்சக்களை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது – அடித்துக் கூறுகின்றார் மைத்திரி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
