விபரீதத்தில் முடிந்த மது விருந்து – பரிதாபமாக பறிபோன உயிர்!
11 view
உடுகம பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மதுபான விருந்து ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் எல்லை மீறி சென்றதையடுத்து விருந்துக்கு வந்த நபரொருவரால் விருந்து இடம்பெற்ற வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாகியாதெனிய பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
The post விபரீதத்தில் முடிந்த மது விருந்து – பரிதாபமாக பறிபோன உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விபரீதத்தில் முடிந்த மது விருந்து – பரிதாபமாக பறிபோன உயிர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
