மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! – வெளியான விபரம்
10 view
2023ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள மின்சார கட்டண திருத்தமானது குறைந்த மின்சார பாவனையை கொண்ட நுகர்வோருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருத்தம் நாளை மறுதினம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தின் கீழ், 0 முதல் 60 அலகு வரையிலான பிரிவின் கீழ் ஒரு அலகுக்கான கட்டணமும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களும் திருத்தப்பட்டுள்ளன. இதன்படி, 8 ரூபாயாக இருந்த அலகுக்கான கட்டணத்தை 30 ரூபாயாகவும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் 120 ரூபாயில் இருந்து 400 ரூபாயாகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய திருத்தத்தில் அலகுக்கான கட்டணம் 10 ரூபாயில் இருந்து 37 ரூபாயாகவும், 31-60 அலகுகளுக்கு நிலையான கட்டணம் 240 ரூபாயில் இருந்து 550 ரூபாயாகவும் உயர்த்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 60 யூனிட்டுகளுக்கு மேல் உள்ள பிரிவின் கீழ் உள்ள ஒரு அலகுக்கான கட்டணம் மற்றும் நிலையான கட்டணமும் புதிய திருத்தத்தின் மூலம் அதிகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும் 16 முதல் 60 வரை…
The post மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! – வெளியான விபரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மின்சாரத்தை குறைவாக பயன்படுத்துவோருக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! – வெளியான விபரம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
