2023இல் இலங்கை மாணவர்களின் கல்வி மீது ஏற்படப்போகும் பெரும் தாக்கம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை
6 view
அரசாங்கத்தின் அதிகரித்த புதிய வரிகள் புதுவருடத்தில் மாணவர்களின் கல்வி மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் எதிர்கொள்ளவுள்ள அதிகரித்த வரியினால் மாணவர்களின் கல்வி முற்றாக பாதிக்கப்படும் என மகளிர் அமைப்பு தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலை காரணமாக சிறுவர்கள் பல்வேறு துஸ்பிரயோகங்களை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ள சமன்மாலி குணசிங்க பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவருகின்றது என குறிப்பிட்டுள்ளார். தங்கள் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதால் தாய்மார்கள் கடும் அழுத்தத்தில் உள்ளனர் மின்சார நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என அமைச்சர் எச்சரித்துள்ளதை நாங்கள் கண்டிக்கின்றோம், ஏற்கனவே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை அவர் அச்சுறுத்துகின்றார் என தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த உரிமைகளிற்கான மகளிர் அமைப்பின் சமன்மாலி குணசிங்க தெரிவித்துள்ளார். அமைச்சர்கள் தற்போது எங்கள் பிள்ளைகளின் கல்வியை அழிவுப்பாதையில் கொண்டுசெல்கின்றனர் நாட்டை அழித்துவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் நடைபெறும்போது கல்வியமைச்சரை காணமுடியவில்லை…
The post 2023இல் இலங்கை மாணவர்களின் கல்வி மீது ஏற்படப்போகும் பெரும் தாக்கம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 2023இல் இலங்கை மாணவர்களின் கல்வி மீது ஏற்படப்போகும் பெரும் தாக்கம்! விடுக்கப்பட்ட எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
