திலீபனின் நினைவேந்தல் விவகாரம் : சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் கட்டளை!
6 view
திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டித்தமை தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை 2023 ஜனவரி மாதம் 11 ம் திகதி காலை 8 மணிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்திற்கு சமூகம் அளிக்குமாறு நீதிமன்ற கட்டளை வழங்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை எம்.கே.சிவாஜிலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதிமன்ற கட்டளையை வழங்கினர். தியாகி திலீபனின் நினைவுதினத்தை முன்னிட்டு நீதிமன்ற தடையை மீறி திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்டித்த குற்றச்சாட்டின் கீழ் எம்.கே.சிவாஜிலிங்கம் உரும்பிராய் பகுதியில் வைத்து 2020 செப்டம்பர் 15 ம் திகதி கைதுசெய்யப்பட்டார். நீதிமன்ற தடையுத்தரவை மீறியமை மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் ‘ உறுப்பினரை நினைவுகூர்ந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கத்தை மன்று எச்சரித்து 2 இலட்சம் ரூபாய் கொண்ட சரீரப் பிணையில் விடுவித்திருந்தது. பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்தாலும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில்…
The post திலீபனின் நினைவேந்தல் விவகாரம் : சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திலீபனின் நினைவேந்தல் விவகாரம் : சிவாஜிலிங்கத்திற்கு நீதிமன்றம் கட்டளை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
