சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம்
6 view
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ப.கேசவதாசன் அவர்களது தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக யாழ். மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு.இ. விஜயமோகனராசா கலந்துகொண்டிருந்தார். இதன்போது புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை க.பொ.த.உயர்தரப் பரீட்சை போன்ற பரீட்சைகளில் சித்தி எய்திய கூட்டுறவு பணியாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
The post சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியம் அங்குரார்ப்பணம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
