பாதுகாப்பு வேலியில் சிக்குண்ட காட்டு யானை உயிரிழப்பு
6 view
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இத்திக்குளம் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டனர். இத்திக்குளம் பகுதியில் உள்ள வயல் நிலத்தை யானையிலிருந்து பாதுகாப்பதற்காக விவசாயி ஒருவர் யானை பாதுகாப்பு வேலியை அமைத்துள்ளார். இவ் யானை பாதுகாப்பு வேலியில் சிக்குண்ட காட்டு யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. யானையின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் குறித்த காணி உரிமையாளரிடம் பொலிஸார் வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
The post பாதுகாப்பு வேலியில் சிக்குண்ட காட்டு யானை உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பாதுகாப்பு வேலியில் சிக்குண்ட காட்டு யானை உயிரிழப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
