கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
6 view
சட்டவிரோதமான முறையில் ஜோர்தானுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டில் சிக்கித் தவிப்பதாகவும், தொழில் பெற்றுத் தருவதாக மக்களை ஏமாற்றும் கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம் எனவும் ஜோர்தானிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, சுமார் 10 நாடுகளில் இருந்து ஜோர்தானுக்கு வந்தவர்களே இவ்வாறு சிக்கித் தவித்துள்ளதாகவும், குழுக்களாக ஜோர்தானுக்கு செல்லும் இலங்கையர்கள் தொடர்பில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகளின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பணியகம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தாங்கள் பணிபுரிய விரும்பும் நாட்டில் பணியகப்பதிவு, செல்லுபடியாகும் பணி விசா மற்றும் அந்த நாட்டில் சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான வேலைவாய்ப்பு ஒப்பந்தம் ஆகியவற்றைப் பெற வேண்டிய அவசியம் குறித்து தொடர்ந்து தெரிவிக்கப்பட்டாலும், சிலர் தொடர்ந்து பிடிபட்டுள்ளனர். பல்வேறு நபர்களின் மோசடி நடவடிக்கைகள், அவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் இலங்கையின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் என்று திணைக்களம்…
The post கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடத்தல்காரர்களின் மோசடி நடவடிக்கைகளில் சிக்க வேண்டாம்! இலங்கையர்களுக்கு எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
