15 வயதுச் சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் – இலங்கையில் நடந்த சம்பவம்!
6 view
தம்புள்ளை – நிகவடவன பிரதேசத்தில் 15 வயதுச் சிறுமியை கடத்திச் சென்று மதம் மாற்றி திருமணம் செய்ய தயாராக இருந்த இளைஞரையும் அவரது மாமாவையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சிறுமி கலேவெல பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நிகவடவன பிரதேச முஸ்லிம்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தம்புள்ளை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. திருமண வைபவத்திற்கு முன்னதாக சிறுமியின் தாய், தந்தை மற்றும் இளைஞனின் உறவினர்கள் பலர் ஒன்று கூடி, சிறுமி மதம் மாறிய மகிழ்ச்சியை கொண்டாட நிகவடவன பகுதியில் உள்ள வீடொன்றில் விருந்து வைத்துள்ளனர். அப்போது குறித்த இளைஞருடன் வீட்டில் தனியாக இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் சிறுமி தெரிவித்துள்ளார். இந்தச் சிறுமியிடம் மேலும் விசாரணை நடத்தியதில், குறித்த 15 வயதுடைய சிறுமி, இதற்கு முன்னரும் கலேவெல பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த…
The post 15 வயதுச் சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் – இலங்கையில் நடந்த சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 15 வயதுச் சிறுமியை கடத்தி மதம் மாற்றி திருமணம் – இலங்கையில் நடந்த சம்பவம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
