மருத்துவ உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!
13 view
ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள 11,000 விண்ணப்பங்களுள் 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார தெரிவித்தார். அநேகமான விண்ணப்பங்களுடன் தொடர்புபட்ட கொடுப்பனவுகள் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள நிலையில் எஞ்சிய விண்ணப்பங்களுக்கான கொடுப்பனவுகளையும் எதிர்வரும் ஓரிரு வாரங்களில் செலுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் சரத் குமார மேலும் குறிப்பிட்டார். அதற்கமைய, இவ்வருடத்தில் மருத்துவ உதவிக்காக சுமார் 1500 மில்லியன் ரூபா தற்போது வரை செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2022-08-01 ஆம் திகதி வரை ஜனாதிபதி நிதியத்தில் குவிந்து கிடந்த 8,210 விண்ணப்பங்கள் தொடர்பில் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து அதற்கான பணிகளை நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவும் ஜனாதிபதி நிதியத்தின் புதியச் செயலாளர் டபிள்யூ.ஏ. சரத்குமார வழங்கிய பணிப்புரைக்கமைய அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய இதுவரை 10,360 விண்ணப்பங்கள் தொடர்பான பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.…
The post மருத்துவ உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மருத்துவ உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
