வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது!
14 view
விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 9 இலட்சம் ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் இருவர் இன்று மாலை கட்டுநாயக்க பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப் படையினர் வழங்கிய இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், கட்டுநாயக்க ஹீனரியன பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் விஷேட அதிரடிப் படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வலம்புரி சங்கினை 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்காக பொருந்திக் கொண்டவர்கள் எனக் கூறப்படும் நபர்கள், சந்தேக நபர்களால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வரை பல இடங்களுக்கு வரவரைக்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. அதன் பின்னர் மாலை வேளையில், கட்டுநாயக்க ஹீனரியன பகுதிக்கு வலம்புரி கொள்வனவு செய்பவர்கள் சந்தேக நபர்களால் வரவழைக்கப்பட்ட நிலையில் இது முறியடிக்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
The post வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வலம்புரி சங்கு விற்பனை செய்ய முயற்சித்த இருவர் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
