விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்!
14 view
விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கொலை செய்யப் போவதாக மிரட்டி கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார். வத்தளை பிரதேசத்தில் உள்ள விடுமுறை விடுதி ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் ஜா-எல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் சென்று வீட்டில் இருந்தவர்களுடன் முரண்பட்ட பின்னர் விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி வீட்டுக்குள் இருந்தவர்களை அச்சுறுத்தி கொள்ளையடிக்க முற்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரிடம் இருந்து போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட கெப் வண்டி, போலி இலக்கத்தகடுகள், விளையாட்டுத் துப்பாக்கி என்பவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
The post விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டுத் துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
