யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி!
6 view
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகத்தை உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 23ஆம் திகதி திகதியிடப்பட்டு, இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை காங்கேசன்துறைக்கும், புதுச்சேரிக்கும் இடையில் ஜனவரி மாதம், பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த நிலையிலேயே காங்கேசன்துறை துறைமுகம், உள்வருகை மற்றும் வெளியேறலுக்கு அனுமதியுடைய துறைமுகமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை துறைமுகம் தொடர்பில் வெளியான விசேட வர்த்தமானி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
