வவுனியாவில் திடீரென மாயமான சீன அரிசிகள்?
16 view
சீன அரசாங்கத்தால் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு இலட்சத்து 58900 கிலோ அரிசி வவுனியாவில் நீண்ட நாளாக களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள போதும் இதுவரை விநியோகிக்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பாடசாலை செல்லும் தரம் 5 இற்கு உட்பட்ட மாணவர்களின் பசியை போக்கும் முகமாக சீன அரசாங்கத்தால் ஒரு மாணவருக்கு 10 கிலோ வீதம் அரிசி விநியோகிக்கப்பட்டுள்ளது. குறித்த அரிசியானது வடமாகாணத்தில் வடமாகான கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு 4 இலட்சத்து 15450 கிலோ அரிசியும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 13720 கிலோ அரிசியும், மன்னார் மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 7160 கிலோ அரிசியும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு லட்சத்து 5370 கிலோ அரிசியும், வவுனியா மாவட்டத்திற்கு ஒரு இலட்சத்து 62570 கிலோ அரியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வடக்கில் வவுனியா…
The post வவுனியாவில் திடீரென மாயமான சீன அரிசிகள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் திடீரென மாயமான சீன அரிசிகள்? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
