யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற கிடைத்தது பெரும் பாக்கியமே -க.மகேசன் பெருமிதம்!
18 view
யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாக செயலாற்ற கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகதான் நினைக்கின்றேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.அவரது பிரியாவிடை நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து மாற்றம் ஆகி வருகின்ற மாவட்ட செயலாளர்கள் யாவரும் தற்பெருமையோடும், தன்னம்பிக்கையுடனும் செயற்பட்டு வந்துள்ளனர். எனக்கும் இவ் மூன்றுவருடங்களும் சேவையாற்றகிடைத்தது பல எதிர்பார்ப்புகளையே தந்துள்ளது.குறிப்பாக எமது பிரதேச செயலாளர்கள், பதவிநிலை அதிகாரிகள், இடர் அனர்த்த முகாவைத்துவம், கொரோனா தொற்று போன்ற காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களின் இடங்களுக்கு சென்று அதனை அவதானித்து அதற்கான பரிகாரங்கள், நிவராணங்களை பெற்றுத்தந்தனர்.அதற்கான நன்றிகளை தெரிவித்துகொள்வதுடன் எனைய உத்தியோகத்தர்களும் உறுதுணையினை வழங்கியுள்ளனர்.எனவே எதிர்வரும் காலத்திலும். இவ்வாறு பணிகளான சேவைக்கும், எனக்கு பணித்து இருக்கும் இளைஞர் விளையாட்டு திறன் அமைச்சுடைய செயலாளர் பதிவிற்கு பக்கபலாக இருந்து செயற்படுவேன் என்றார்.
The post யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற கிடைத்தது பெரும் பாக்கியமே -க.மகேசன் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற கிடைத்தது பெரும் பாக்கியமே -க.மகேசன் பெருமிதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
