நாட்டில் 57 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவை- அறிக்கையிட்ட முக்கிய அமைப்பு!
7 view
இலங்கையின் சனத்தொகையில் 57 இலட்சம் (26 வீதம்) மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களாக இருக்கின்றனர் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி, இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சமூகத்தின் ஒவ்வொரு துறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. பொருளாதார நெருக்கடி காரணமாக 11% குடும்பங்கள் வருமானத்தை இழந்துள்ளதாகவும், 62% குடும்பங்கலின் வருமானம் குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் 85% மக்கள் இந்நிலைக்குத் தகவமைந்துள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிடுகிறது. 49 இலட்சம் அல்லது 22% பேர் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிக்கப்படுவதாக அந்த அமைப்பு மேலும் கூறுகிறது.
The post நாட்டில் 57 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவை- அறிக்கையிட்ட முக்கிய அமைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டில் 57 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவி தேவை- அறிக்கையிட்ட முக்கிய அமைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
