வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்!
10 view
நகர அபிவிருத்தி அதிகார சபையின் நடுத்தர வருமான வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஈட்டியுள்ள தொகை 502,170.93 டொலர்களாகும். இது உள்ளூர் நாணயத்தில் 181.2 மில்லியன் ரூபாயாகும். இந்த ஆண்டு டொலர்களில் வீடுகள் விற்கப்பட்டு எதிர்பார்க்கப்படும் வருமானம் 05 இலட்சம் டொலர்கள். ஆண்டு முடிவதற்குள் அந்த இலக்கை தாண்ட முடிந்ததாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்நாட்டின் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு இலங்கை தொழிலாளர்கள் கொள்வனவு செய்வதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, முதலாவது வீடு கடந்த செப்டம்பர் மாதம் விற்கப்பட்டது. துபாயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரால்…
The post வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீடுகள் டொலருக்கு விற்கப்படும் திட்டத்தின் கீழ் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் வருமானம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
