காணொளி விவகாரம்: ஆஷு மாரசிங்கவினால் நஷ்டஈடு கோரிக்கை!
6 view
பேராசிரியர் ஆஷு மாரசிங்க பற்றி சித்தரிக்கப்பட்ட காணொளியை வெளியிட்டு அந்த காணொளிக்கு தவறான விளக்கத்தை அளித்ததன் மூலம் தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் ஹிருணிகா பிரேமச்சந்திர 1.5 பில்லியன் ரூபாயும் மற்றும் ஆதர்ஷ கரதன 1 பில்லியன் ரூபாயும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என பேராசிரியர் ஆஷு மாரசிங்க நஷ்டஈட்டு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார் கடந்த 23 ஆம் திகதி ஹிருணிகா மற்றும் ஆதர்ஷா நடத்திய ஊடகவியலாளர் மாநாடு பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கத்தில் அமைந்ததாகவும் அதன் மூலம் பேராசிரியர் ஆஷு மாரசிங்கவிற்கு எதிராக தவறான முறையில் பொதுக் கருத்தை உருவாக்குவதாகவும் குறித்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காணொளி மற்றும் அது தொடர்பான புகைப்படங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கடந்த 24ம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
The post காணொளி விவகாரம்: ஆஷு மாரசிங்கவினால் நஷ்டஈடு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணொளி விவகாரம்: ஆஷு மாரசிங்கவினால் நஷ்டஈடு கோரிக்கை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
