அரசியல் தீர்வை வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள்க – அநுரவின் தோழர் தினேஷ் அறைகூவல்!
9 view
“ஆட்சியில் இருந்த எந்த அரசும் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கவில்லை. ஆனால், தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்கியே தீரும். எனவே, தமிழ் மக்கள் அனைவரும் தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள வேண்டும்.” – இவ்வாறு அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் – கொழும்பு மாவட்டத்துக்கான நிர்வாகக் குழு உறுப்பினரும் ‘கோட்டா கோ ஹோம்’ போராட்டத்தின் முன்னணிச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமான தினேஷ் குமார் கார்மேகம் தெரிவித்தார். “மக்களை அணிதிரட்டி ராஜபக்சக்களை ஆட்சிப்பீடத்திலிருந்து விரட்டியடித்தது தேசிய மக்கள் சக்திதான் என்பதை எவரும் மறக்கமாட்டார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், “ராஜபக்சக்கள் கொடூரர்கள். ரணிலும் சஜித்தும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள். இந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லக் கூடிய ஒரேயொரு அணி தேசிய மக்கள் சக்திதான். இதை உணர்ந்துதான் உலக நாடுகளின் தூதுவர்களும், பெரும்பான்மை…
The post அரசியல் தீர்வை வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள்க – அநுரவின் தோழர் தினேஷ் அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் தீர்வை வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரள்க – அநுரவின் தோழர் தினேஷ் அறைகூவல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
