தினேஷ் சாப்டரின் கொலை விவகாரம் : அவிழ்க்கப்படும் மர்மமுடிச்சுகள்!
7 view
படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் விவகாரத்தில், விசாரணைகளை முன்னெடுக்கும் 8 சிறப்புக் குழுவின் விசாரணையாளர்களையும் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன கலந்துரையாடலொன்றுக்கு அழைத்துள்ளார். சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின் மேற்பார்வையில், கிருலப்பனையில் அமைந்துள்ள பாதாள உலக குழுக்கள் மற்றும் மனிதப் படுகொலைகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் சிறப்பு பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஹேமால் பிரஷாந்தவின் ஆலோசனையின் கீழ் இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இதன் போது, விசாரணையின் முன்னேற்றம் தொடர்பில், ஆரயப்பட்டு, தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. இதனிடையே, தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில், இதுவரை 84 பேரின் வாக்கு மூலங்களை விசாரணையாளர்கள் பதிவு செய்துள்ளதாக சி.ஐ.டி. தகவல்கள் தெரிவித்தன. ஷாப்டர் தனது மனைவியின் தாயாருக்கு, மனைவியின் குண நலன்களை வர்ணித்து நன்றி கூறி எழுதிய கடிதம் ஒன்றும், அதனை ஒத்த குறுஞ்செய்தி ஒன்று…
The post தினேஷ் சாப்டரின் கொலை விவகாரம் : அவிழ்க்கப்படும் மர்மமுடிச்சுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தினேஷ் சாப்டரின் கொலை விவகாரம் : அவிழ்க்கப்படும் மர்மமுடிச்சுகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
