தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார கடமை பொறுப்பேற்பு!
13 view
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார இன்று (29) காலை கடமையினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். மத அனுஷ்டானத்துடன் தனது கடமையினை பொறுப்பேற்றுக் கொண்டதுடன் இவர் முன்னர் பூண்டுலோயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியுள்ளார். பிரதம பொலிஸ் அதிகாரியான இவர் மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களிலும் பொலிஸ் கடமையினை ஆற்றியுள்ளார். இரு பிள்ளைகள் மற்றும் தனது துனைவியார் சகிதம் கடமையினை தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பேற்றார். முன்னர் கடமையாற்றிய பொறுப்பதிகாரி இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து குறித்த வெற்றிடத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
The post தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார கடமை பொறுப்பேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தம்பலகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக ஏ.எஸ்.டபிள்யூ.ஆர்.பண்டார கடமை பொறுப்பேற்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
