யாழ் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கணபதி ஹோம நிகழ்வு!
7 view
விநாயகர் பெருங்கதை முடிவை முன்னிட்டு நேற்றைய தினம்(28) புதன்கிழமை குப்பிழான் சிவபூமி ஞானாச்சிராமத்தில் கணபதி ஹோமமும் ,திருமுறை பாராயணமும் இடம்பெற்றது. இந்நிகழ்வானது காலை 6.00 மணிக்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது. அருளாசி உரை ,திருவாசக விளக்கவுரை,பண்ணிசை போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்நிகழ்வில் தவத்திரு மீனாட்சி சுந்தரத் தம்பிரான் சுவாமிகள், சைவத்சித்தாந்தம் பெரும்புலவர் திருமுறைக் களஞ்சியம்,குமாரவயதூர் திருமுறைக் கலாநிதி முனிவர் திருஞான பாலச்சந்திர ஓதுவார் ,குன்றத்தூர் எம்.கே பிரபாகர மூர்த்தி ஐயா,பக்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
The post யாழ் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கணபதி ஹோம நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கணபதி ஹோம நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
