சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் தமிழகத்தில் கைது!
7 view
ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி, தமிழகம் – கோயம்புத்தூரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு சந்தேக நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஷேக் ஹிதாயத்துல்லா மற்றும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தும் திட்டங்களில் பங்கேற்றதாகக் கூறப்படும் சனோபர் அலி ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இலங்கையில் 250 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் மூளையாக செயற்பட்டிருந்த சஹ்ரான் ஹாஷிமுடன், ஐஎஸ் அமைப்பில் உறுப்பினரான ஷேக் ஹிதாயத்துல்லா தொடர்பை பேணியதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹிதாயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகிய இருவரும் தமிழகத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபர்கள் 2022 பெப்ரவரியில் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் உள்ள வனப்பகுதியின்…
The post சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் தமிழகத்தில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்த இருவர் தமிழகத்தில் கைது! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
