மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன்!

6 view
மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கெசினோ விளையாட்டுகளுக்கு அதிக அடிமையாக இருந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது. மேலும் கெசினோ கிளப்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி குறித்த இளைஞன் ஏமாற்றி வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இலட்சக்கணக்கான ரூபாய் மின்சாரக் கட்டண பட்டியல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கைப்பேசி செயலி மூலம் செலுத்தினால் 20% தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என கூறி நபரொருவர் மோசடியில் ஈடுபடுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த…
The post மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース