புத்தளம் எலுவாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் – விவசாயிகள் கவலை!
14 view
புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேச செயலகத்திற்குற்பட்ட பழைய எலுவாங்குளம் பகுதியில் இம்முறை சுமார் 600 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக விவசாயம் நேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக காட்டு யானைகள் குறித்த பகுதியில் உட்புகுந்து விவசாய நிலங்களை துவம்சம் செய்துவருவதாக அக்கிராம விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் முறையான மின்சார வேலிகள் இல்லாமையின் காரணத்தினாலே குறித்த காட்டு யானைகள் விவசாயக் கிராமத்தில் உற்புகுவதாக இதன்போது விவசாயிகள் தெரிவித்தனர். இது தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல தடவைகள் கூறியும் அதிகாரிகள் அசமந்தபோக்காக செயற்படுவதாக அக்கிராம விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர். தாம் நுன்கடன்களைப் பெற்றும் தங்க நகைகளை அடகு வைத்தும் உரப் பிரச்சனை மற்றும் எரிபொருள் பிரசானைகளுக்கு மத்தியில் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் காட்டு யானைகளின் தொல்லைகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த கிராம மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவணத்தில் கொண்டு குறித்த பகுதிக்கு யானை வேலியை அமைத்துத்…
The post புத்தளம் எலுவாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் – விவசாயிகள் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் எலுவாங்குளத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் – விவசாயிகள் கவலை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
