வவுனியாவில், சமத்துவக் கட்சியின் வன்னி தலமையகம் திறந்து வைப்பு!

20 view
சமத்துவக் கட்சியின் வன்னி தலைமை அலுவலகம்  வவுனியா  கந்தசுவாமி வீதியில் இன்று (28.12.2022) காலை 10.00 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. அலுவலகத்தின் பெயர்ப்பலகையினை கட்சியின் தவிசாளர் சுப்பையா மனோகரன் அவர்கள் திறந்து வைத்தமையுடன் அலுவலகத்தினை கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் அவர்கள் நடா வெட்டி திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் , விருந்தினர் உரைகள் என்பவற்றுடன் நிகழ்வுகள் நிறைவு பெற்றிருந்தன. இந் நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிசோர் , வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளர் தர்மலிங்கம் யோகராஜா மற்றும் கட்சியின் நிர்வாக உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள் ,  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post வவுனியாவில், சமத்துவக் கட்சியின் வன்னி தலமையகம் திறந்து வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース