அதிகளவான குற்றச் செயல்கள் மேல் மாகாணத்தில் பதிவு!!
14 view
இந்த வருடத்தில் இது வரையானகாலப் பகுதியில் 29,930 பாரிய குற்றங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 497 கொலைகள் நடந்துள்ளதாகவும் அதில் 223 துப்பாக்கிச் சூடு அல்லது தாக்குதல்கள் காரணமாக நடந்தவை என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்களில் 37 வீதமானவை மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக பேராசிரியர் வசந்த அத்துகோரள சுட்டிக்காட்டியுள்ளார். வடமேற்கு மாகாணத்திலிருந்து 13 வீதமும், தென் மாகாணத்திலிருந்து 10 வீதமும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 09 வீதமும், மத்திய மாகாணத்திலிருந்து 08 வீதமும் பதிவாகியுள்ளன. இந்தக் காலப்பகுதியில் சொத்துக்களுக்கு எதிரான 16,317 குற்றங்களும், நபர்களுக்கு எதிராக 5,964 குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளன. கடந்த 11 மாதங்களில் 1,466 வாகனத் திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டு சம்பவங்கள் எனவும், இதில் 39 வீதமானவை மேல்…
The post அதிகளவான குற்றச் செயல்கள் மேல் மாகாணத்தில் பதிவு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அதிகளவான குற்றச் செயல்கள் மேல் மாகாணத்தில் பதிவு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
