கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பாவனைக்கு!
19 view
கட்டி முடிக்கப்பட்டுள்ள கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 94 மில்லியன் ரூபா ஆகும். 2016ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இலங்கை பொறியியல் கூட்டுத்தாபனம் இதன் ஒருபகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொண்டது. பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபை இங்கு 2020 இல் கட்டுமானப் பணிகளை ஆரம்பித்து 2022 மே மாதம் நிறைவு செய்தது. வடக்கு மாகாண சபைக்கு சொந்தமான காணியில் இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை மக்களிடம் கையளிக்கப்படவில்லை என அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பில் தெரியவந்துள்ளது. அங்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்த புதிய பஸ்…
The post கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பாவனைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி புதிய பேருந்து நிலையம் விரைவில் மக்கள் பாவனைக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
