தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரிக்கு!
7 view
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகியுள்ளது என்றும் இம்முறை மரத்திலாலான புதிய வாக்குப் பெட்டிகள் இம்முறை தயாரிக்கப்படாது என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என்றும் அதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான வேட்பு மனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடப்படும் என அவர் தெரிவித்தார். தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மேலும் கூறினார்.
The post தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரிக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனவரிக்கு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
