மக்கள் பிரதிநிதிகளுக்கு சொந்தமாக 2000 மதுபானசாலைகள்! – வெளிவந்த தகவல்
6 view
நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள 4 ஆயிரத்து 910 மதுபான விற்பனையகங்களில் தற்போதைய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சொந்தமான 2 ஆயிரம் மதுபான விற்பனையகங்கள் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இதனை தெரிவித்தார். நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் மதுபான வியாபாரிகளாகவும் போதைப்பொருள் வியாபாரிகளாகவும் மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவர்களின் பெயர்களை வெளியிட தாம் தயங்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, பாடசாலை மாணவர்களின் புத்தகப்பைகளை சோதனை செய்வதை தவிர்த்து, போதைப்பொருள் வியாபாரிகளின் வீடுகளை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
The post மக்கள் பிரதிநிதிகளுக்கு சொந்தமாக 2000 மதுபானசாலைகள்! – வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் பிரதிநிதிகளுக்கு சொந்தமாக 2000 மதுபானசாலைகள்! – வெளிவந்த தகவல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
