23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம்
6 view
23 வருடங்களின் பின்னர் புகையிரதத்தில் கொழும்பு கோட்டைக்கு மரக்கறிகளை கொண்டு செல்லும் நடவடிக்கை நேற்று பிற்பகல் ஆரம்பிக்கப்பட்டதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்கள் ஒன்றியம் மற்றும் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கமைய, புகையிரதத்தில் மரக்கறிகளை ஏற்றிச் செல்வதற்காக புகையிரத திணைக்களத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவினால் ஐந்து விசேட பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. முன்னோடித் திட்டமாக நானுஓயா ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டைக்கு காய்கறிகள் போக்குவரத்து நேற்று மாலை 5 மணிக்கு ஆரம்பித்ததுடன், சிறப்பு ரயில் நள்ளிரவு 12 மணிக்கு கொழும்பு கோட்டையை வந்தடைந்துள்ளது. கொழும்பில் உள்ள சுப்பர் மார்க்கட் மற்றும் மெனிங் சந்தைக்கு தேவையான மரக்கறி சரக்குகள் அந்த புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்டாலும் அந்த புகையிரதத்தில் பயணிகள் பயணிக்க வாய்ப்பில்லை என ரயில்வே திணைக்களத்தின் வர்த்தக…
The post 23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 23 வருடங்களின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
