கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட இனம்தெரியாதவரின் சடலம் !
6 view
கிளிநொச்சியில் சடலம் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர். இச்சம்பவமானது கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிபோக்கு சந்தியை அண்மித்த பெரிய பரந்தன் பகுதியில் அப்பகுதியில் அமைந்துள்ள நீர்ப்பாசன கால்வாயில் சடலம் அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடயவியல் பொலிஸார் அப்பகுதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நீதவானின் வருகையின் பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் கிளிநொச்சி குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். The post கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட இனம்தெரியாதவரின் சடலம் ! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.
The post கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட இனம்தெரியாதவரின் சடலம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சியில் நீர்பாசன வாய்க்காலில் இருந்து மீட்கப்பட்ட இனம்தெரியாதவரின் சடலம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
