கிளிநொச்சி கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!!
6 view
கிளிநொச்சி கரடி போக்குச்சந்திக்கு அண்மித்த பகுதியில் நீர்ப்பாசன கால்வாயில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரடிப் போக்கு சந்தில் இருந்து பூநகரி செல்லும் வீதியின் நீர்ப்பாசன கால்வாயிருந்து நேற்று (27) பிற்பகல் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பகுதி நீர் பாசன வாய்க்காலுக்குள் சடலம் ஒன்று கிடப்பது தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் கிளிநொச்சி பொலிருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
The post கிளிநொச்சி கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கிளிநொச்சி கால்வாயில் இருந்து ஆணின் சடலம் மீட்பு!! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
