யாழில் 5000 ரூபாவை பெறுவதற்கு 2000 ரூபாவை செலவு செய்த பயனாளிகள்!
13 view
உலக உணவுத் திட்டத்தின் கீழ் யாழ். மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான 2 ஆம் கட்ட கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில், தெல்லிப்பளை, நெடுந்தீவு, வேலணை, ஊர்காவற்றுறை, காரைநகர், சங்கானை, மருதங்கேணி மற்றும் சாவகச்சேரி ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு, 18918 பயனாளிகளுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி முதல் முதலாவது கொடுப்பனவாக 15000 ரூபா வழங்கப்பட்டது.அதற்கான இரகசிய இலக்கம் குறுந்தகவல் ஊடாக தொலை பேசிகளுக்கு அனுப்பப்பட்டன.இந்நிலையில், 2 கட்டக் கொடுப்பனவாக 5000 ரூபா இம்மாதம் 20 ஆம் திகதி முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் சிலருக்கு மட்டுமே குறுந்தகவல் கிடைத்துள்ளது.அதைனையடுத்து குறுந்தகவல் கிடைக்கப்பெறாதவர்கள் சாவகச்சேரி பிரதேச செயலகத்திற்கு இன்று அழைக்கப்பட்டனர்.அதற்கமைய 500 மேற்பட்ட பயனாளிகள் வருகைதந்திருந்தனர்.அதில் அதிகமானவர்கள் வயோதிபர்களாக இருந்தமையால் அவர்கள் போக்குவரத்து மற்றும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.5000 ரூபா கொடுப்பனவைப்பெற 2000 ரூபா முச்சக்கர வண்டிக்கு கொடுத்து வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
The post யாழில் 5000 ரூபாவை பெறுவதற்கு 2000 ரூபாவை செலவு செய்த பயனாளிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழில் 5000 ரூபாவை பெறுவதற்கு 2000 ரூபாவை செலவு செய்த பயனாளிகள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
