வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!
7 view
வறுமை, கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, மாறவில்ல கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வன்னிபிரதி பொலிஸ்மா அதிபரின் ஒழுங்குபடுத்தலில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. நெளுக்குளம் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்ற குறித்த, நிகழ்வில், பண்டாரிக்குளம் , உளுக்குளம், நெளுக்குளம், பாவற்குளம் முஸ்லீம் மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமை கோட்டிற்குட்பட்ட 250 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த, நிகழ்வில், கன்ன ராஜபக்ச அறக்கட்டளையின் தலைவர் போதகர் சன்ன ராஜபக்ச , வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன அழகக்கோன், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுகத் களகமகே , வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே, நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ, நெளுக்குளம் பாடசாலை உப அதிபர் சிவநேசன், பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வறுமை கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
