யாழ், கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம் மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமிக்க கோரி மகஜர் கையளிப்பு!
14 view
சர்வாதிகாரமும் ஊழலும் நிறைந்த யாழ்ப்பாணம் கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம்மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமித்து மாணவர்களின் கல்விக்கு வழிகாட்டக்கோரி வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த மகஜரின் பிரதி வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர், வடமாகாணக் கல்விப்பணிப்பாளர், யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர், யாழ்ப்பாண கோட்டக்கல்வி பணிப்பாளர், இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் என்பவற்றுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கொட்டடி கல்வி அபிவிருத்திக் குழு இணைப்பாளர் மு.கோமகன், யாழ் ஊடக அமையத்தில் இன்று(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது இவ், விடயத்தை தெரிவித்தார். மேலும், தெரிவிக்கையில், யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள கொட்டடி நமசிவாய வித்தியாலயத்தில் கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக பாடசாலையின் அதிபராக இருந்து மாணவர்களையும் ஆசிரியர்களையும் தவறாக வழிநடத்தி கொட்டடி சமூகத்தையும் ஏமாற்றி பாடசாலையிலும் பாடசாலைக்கு வெளியேயும் பலவிதமான ஊழல்…
The post யாழ், கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம் மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமிக்க கோரி மகஜர் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ், கொட்டடி நமசிவாய வித்தியாலய அதிபரை இடம் மாற்றி ஆளுமை மிக்க அதிபரை நியமிக்க கோரி மகஜர் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
