பணப்பையை தவறவிட்ட சாரதி – சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உன்னத செயல்!
7 view
வீதியில் கண்டெடுக்கப்பட்ட பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸை கல்முனை தலைமையக காவல்துறையினர் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக காவல் நிலையத்தில் இடம்பெற்றதுடன் காணாமல் போன பணப்பை மீட்கப்பட்டு காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் உரிய நபரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பகுதிக்கு கடந்த 21 ஆம் திகதி கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ. எல். எம். றிபாஸ் கடமைக்காக சென்ற நிலையில் கடவத்தை பகுதியில் நள்ளிரவு பணப்பை ஒன்றினை கண்டெடுத்துள்ளார். பின்னர் கல்முனை தலைமையக காவல்நிலையத்திற்கு சென்று பணப்பையை உரிய நபரிடம் ஒப்படைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார். குறித்த இப்பணப்பையில் சுமார் 44030 ரூபா பெறுமதியுடைய பணம் உட்பட சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் உள்ளடங்கி இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது…
The post பணப்பையை தவறவிட்ட சாரதி – சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உன்னத செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பணப்பையை தவறவிட்ட சாரதி – சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உன்னத செயல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
