மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் மின் கட்டணம்! மின்சார சபையின் அறிவிப்பு
12 view
மின் கட்டணம் 60 முதல் 65 வீதத்திற்குள் திருத்தப்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இலங்கை மின்சார சபையின் பொதுமுகாமையாளர் ரொஹான் செனவிரத்ன இதனை தெரிவித்துள்ளார். இதற்கு தேவையான நடவடிக்கைகள் தற்போது அமைச்சு மட்டத்தில் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக இலங்கை மின்சார சபையால் மாத்திரம் தீர்மானிக்க முடியாது எனவும் ரொஹான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கட்டண அதிகரிப்பு குறித்த கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
The post மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் மின் கட்டணம்! மின்சார சபையின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் மின் கட்டணம்! மின்சார சபையின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
