அராலி கரைச்சி பகுதியில் தற்காலிகமாக கழிவுகளை போடுவதற்கு சபை அனுமதி!
12 view
வலி. மேற்கு பகுதிகளில் சேரும் கழிவுகளை அராலி கரைச்சி பகுதியில் மூன்று மாதங்களுக்கு தற்காலிகமாக போடுவதற்கு சபையில் இன்றையதினம் அனுமதி வழங்கப்பட்டது. அராலி கிழக்கு பகுதியில் இதுவரை காலமும் கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் குறித்த பகுதிக்கு செல்லும் வீதி அபிவிருத்தி பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அராலி கரைச்சி பகுதியில் தற்காலிகமாக கழிவுகளை போடுவதற்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொட்டப்படும் கழிவுகளை கரவெட்டி பிரதேச சபையினர் வாரத்திற்கு ஒரு தடவை வந்து ஏற்றிச் செல்வார்கள் எனவும் சபையில் தெரிவிக்கப்பட்டது.
The post அராலி கரைச்சி பகுதியில் தற்காலிகமாக கழிவுகளை போடுவதற்கு சபை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அராலி கரைச்சி பகுதியில் தற்காலிகமாக கழிவுகளை போடுவதற்கு சபை அனுமதி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
