தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் !
6 view
இராணுவம் கையகப்படுத்தியுள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி முல்லைத்தீவு கேப்பாபிலவு கிராம மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போர் காரணமாக 2008 ல் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேறிய நிலையில் தமது வளங்களையம் அதில் கிடைக்கும் வருமானங்களையும் இராணுவம் சுரண்டிவருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். விவசாயம், கால்நடை வளர்ப்பு, கடற்தொழிலை நம்பியே வாழ்ந்துவரும் தமக்கு காணிகள் இல்லாதமை பெரும்பின்னடைவு என்றும் கூறியுள்ளனர். மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கம் காணிவிடுவிப்பு தொடர்பாக பேசினாலும் இதுவரை எதுவும் நடக்கவில்லை என்பதால் போராட்டத்தில் ஈடுபடுவதை கூறியுள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
The post தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி கேப்பாபிலவு மக்கள் போராட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
