வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையில் 4 வீடுகள் கையளிப்பு!
6 view
வவுனியா ஈச்சங்குளத்தில் ஐக்கிய இராட்சிய ஓம் சரவணசேவா அறக்கட்டளையின் ஊடாக அமைக்கப்பட்ட 4 வீடுகள் இன்று (27) மக்களுக்கு கையளிக்கப்பட்டது. சற்குரு சரவண பாவா மனசாந்தி குடியிருப்பு எனும் பெயரில் அமைக்கப்பட்ட இந் நான்கு வீடுகளும் சுமார் 45 இலட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டிருந்ததுடன் இவை விசேட தேவையுடையோர் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதன்போது சற்குரு சரவண பாபா குரு, பாராளுமன்ற உறுப்பினர் மு.இராதாகிருஷ்ணன், வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், ஜனாதிபதியின் இணைப்பாளர் இளங்கோவன், லைக்கா குழுவின் பணிப்பாளர் க.பிறேம், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
The post வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையில் 4 வீடுகள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் ஓம் சரவணசேவா அறக்கட்டளையில் 4 வீடுகள் கையளிப்பு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
