சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி!

30 view
சுனாமி ஆழிப்பேரலை இடம்பெற்று 26.12.2022,  18 ஆண்டு நிறைவடைவதை நினைவு கூரும் வகையில் உயிரிழந்த உறவுகளுக்கு மலையக மக்கள் தமது அஞ்சலியை செலுத்தினர். கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரகரமான நிகழ்வாக சுனாமி ஆழிபேரலை அனர்த்தம் இடம்பெற்றது. இவ் அனர்த்தத்தில் உயிர்நீத்த இலங்கை உறவுகளுக்கு தமது அஞ்சலியை மலையக மக்களும் செலுத்தினர். ஹட்டன் பொலிஸார் மற்றும்  நகர வர்த்தகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அஞ்சலியானது, ஹட்டன் புத்தர் சிலைக்கு முன்னால் இடம்பெற்றது. இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் ஹட்டன் நகரில் உள்ள வங்கி ஊழியர்கள், நகர வர்த்தகர்கள், சாரதிகள் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் கலந்துக்கொண்டனர்.
The post சுனாமியில் உயிர் நீத்தவர்களுக்கு மலையகத்தில் அஞ்சலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース