தமிழர் பகுதியில், பரிதாபமாக உயிரிழந்த மாணவி!

19 view
 முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவி உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தும் சாரதி வாகனத்தை நிறுத்தாது ஓட்டிச்சென்றுள்ளார். இதனையடுத்து வாகனம் பயணித்துக்கொண்டிருக்கும் போது வாகனத்தில் இருந்து மாணவி ஒருவரும் மாணவர் ஒருவரும் குதித்துள்ளார். இந்த நிலையில் வாகனத்தில் இருந்து மாணவர்கள் குதித்தது கூட தெரியாத நிலையில் வாகனத்தின் சாரதி வாகனத்தினை ஓட்டிச் சென்றுள்ளார். இதன்போது தலையில் படுகாயமடைந்த முறிப்பு பகுதியினை சேர்ந்த 15 வயதுடைய மாணவி முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா கொண்டு செல்லப்பட்டிருந்தார். இதனையடுத்து , மீண்டும் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார். உயிர்ழந்த மானவியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
The post தமிழர் பகுதியில், பரிதாபமாக உயிரிழந்த மாணவி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース