வீதியால் செல்லும் மக்களை வதைக்கும் கடற்படையினர்!
11 view
பொன்னாலை சந்தியில் உள்ள சோதனைச் சாவடியில் கடமையில் இருக்கும் கடற்படையினர், சோதனை என்ற பெயரில் வீதியில் செல்பவர்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த செயல் தொடர்ச்சியாக இவ்வாறு நடைபெறுவதாக அசௌகரியங்களுக்கு உள்ளாகும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் கடற்படையினர் வீதியில் செல்பவர்களை காணொளி எடுத்து அச்சுறுத்தும் விதத்திலும் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் குறித்த வீதியால் இறாலுடன் சென்ற வியாபாரி ஒருவரை வழிமறித்து அவர் கொண்டு சென்ற இறாலை வீதியில் கொட்டுமாறு கூறி அவரது தொழிலுக்கு இடையூறு விளைவித்துள்ளனர்.
The post வீதியால் செல்லும் மக்களை வதைக்கும் கடற்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதியால் செல்லும் மக்களை வதைக்கும் கடற்படையினர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
