'சீடி' கடை என்ற போர்வையில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனை!
12 view
சினிமா இறுவெட்டு (சீடி) கடை என்ற போர்வையில் பல்கலைக்கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட சந்தேக நபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் உள்ள சினிமா இறுவெட்டு (சீடி) கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக இளைஞர்கள் ஒன்று கூடுவது தொடர்பில் (25) இரவு விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தமைக்கமைய இச்சோதனை நடவடிக்கையை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். இதன் போது இறுவெட்டு (சிடி) கடை என்ற போர்வையில் போதை தரும் மாவா விற்பனையில் சூட்சுமமாக ஈடுபட்ட கண்டி மாவட்டம் மடவளை பகுதியை சேர்ந்த 25 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் வசம் இருந்து மாவா போதைப்பொருள் அடங்கிய பக்கெற்றுக்கள் மீட்கப்பட்டதுடன், மேலதிக விசாரணையை முன்னெடுத்த பின்னர் குறித்த இளைஞனினால் நடத்தி செல்லப்பட்ட கடையில் மறைத்து…
The post 'சீடி' கடை என்ற போர்வையில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 'சீடி' கடை என்ற போர்வையில் மாணவர்களை இலக்கு வைத்து மாவா விற்பனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
