வீதி விபத்துக்களில் 4 பேர் பலி!
13 view
கோப்பாய், ஹலவத்தை, கட்டான மற்றும் கிரிந்திவெல ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நால்வர் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்ணொருவரின் புடவை மோட்டார் சைக்கிளின் பின் சக்கரத்தில் சிக்கியதில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகளும் காயமடைந்து யாழ் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதேவேளை, ஹலவத்த, தித்கட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹலவத்த கொக்காவில பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன், விபத்து தொடர்பில் மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கட்டான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு – கிரிஉல்ல வீதியில் கம்சபா சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில்…
The post வீதி விபத்துக்களில் 4 பேர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வீதி விபத்துக்களில் 4 பேர் பலி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
