சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை!

11 view
2004.12.26 ம் திகதி ஏற்பட்ட சுனாமி பேரழிவால் உயிரிழந்தவர்களை நினைவுகூறி இன்று காலை புத்தளம் மாவட்ட செயலகத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வு புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் தலைமையில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.  இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்கள், புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள், விமானப்படையினர், இராணுவத்தினர், கடற்படையினர், பொலிஸ் அதிகாரிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.   குறித்த நிகழ்வு 9.15 மணியளவில் ஆரம்பமாகியது. இதன்போது தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. இதன்போது சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்காக  9.25 மணியிலிருந்து 9.27 மணிவரை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  உயிரிழந்தவர்களுக்கு ஆத்மா ஷாந்தி புத்தளம் மாவட்ட சர்வமதத் தலைவர்களினால் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது. இதன்போது சர்வமதத் தலைவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டது.
The post சுனாமி பேரழிவில் உயிரிழந்தவர்களுக்கு புத்தளத்தில் ஆத்ம சாந்தி பிரார்த்தனை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース