முல்லையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்!

6 view
ஆழிப்பேரலையால் காவுகொள்ளப்பட்டவர்களின் 18ஆம் ஆண்டு நினைவேந்நல் முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள சுனாமி நினைவாலயத்திலும் ,முல்லைத்தீவு கள்ளப்பாடு மைதானத்திலும் ,புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்திலும் ,கள்ளப்பாடு பாடசாலையிலும்  26.12.2022 இன்றைய தினம் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வில் பொதுமக்கள் ,மக்கள் பிரதிநிதிகள் ,மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும்  கலந்துகொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 2004 ஆம் ஆண்டு இதே நாளில் இடம்பெற்ற ஆழிப்பேரலை (சுனாமி ) பேரனத்தத்தில் முல்லைத்தீவில் மாத்திரம் 3352 பேர் காவு கொள்ளப்பட்டதுடன் பல நூற்றுக்கணக்கானவர்கள் காணாமல் போனதுடன் உடைமைகள் வாழ்விடம் என்பனவும் பறிக்கப்பட்டிருந்தன.
The post முல்லையில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース