விளையாட்டுப் பொருட்களுக்குள் போதைப்பொருள் – அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த பார்சல்!
19 view
விளையாட்டுப் பொருட்களுக்குள் மிகவும் சூட்சுமமாக மறைத்து அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த பார்சலை எடுத்துச் செல்ல சுங்கத்துக்கு வந்த நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படை தலைமையக முகாமின் விசேட சுற்றிவளைப்பு பிரிவு (கொழும்பு வலயம்) சுங்கம் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பை நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொழும்பு 14 ஐச் சேர்ந்த 44 வயதான ஒருவர் அதனை எடுத்துச்செல்ல வந்திருந்தபோதே அவர் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
The post விளையாட்டுப் பொருட்களுக்குள் போதைப்பொருள் – அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த பார்சல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post விளையாட்டுப் பொருட்களுக்குள் போதைப்பொருள் – அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு வந்த பார்சல்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
